கழுகார் பதில்கள்!

@வி.கே.ஆர். கிருஷ்ணன், தாராபுரம்.
எந்த நடிகரின் தீவிர ரசிகராக இருந்தாலும், ஓட்டுப்போடும் விஷயத்தில் பணத்துக்காக மாற்றிப் போடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?


நிச்சயம்!

@மகிழி

‘தமிழ்நாட்டில் வி.ஏ.ஓ தொடங்கி அமைச்சர்கள்வரை தினமும் 400 கோடி ரூபாய் லஞ்சப்பணமாகக் கைமாறுகிறது’ என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ்... உண்மையா?


பீட்டர் அல்போன்ஸ், கணக்கில் வீக் போல, அவர் அனுபவத்தை வைத்துப் பேசுகிறார். தமிழகத்தில் நிறையத் துறைகள் இருக்கின்றன, லட்சக்கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். சரியாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால் கண்ணைக் கட்டும்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
மதுரை ஆதீனம், அ.தி.மு.க-வின் எந்தப் பிரிவில் இருக்கிறார்?


சமாதானப் பிரிவில்.

@ நிகமத் அலி, அடியக்கமங்கலம்
‘பேட்டிகளில் உயிர் வாழும் அரசியல்வாதி டி.டி.வி.தினகரன்’ என்று சாடியிருக்கிறாரே நாஞ்சில் சம்பத்?


பேச்சுகளிலேயே இவர் உயிர்வாழும்போது... பேட்டிகளில் அவர் வாழக்கூடாதோ!

@விஷ்ணுகுமார், மதுரை.

‘இலவச’ மதிய உணவு உண்டு, ‘இலவச’ பயணச்சீட்டு கொண்டு, ‘இலவச’ மடிக்கணினியில் படித்து, இப்போது, ‘இலவசம்‘ வேண்டாம் என்று கூறும் விஜய் ரசிகர்களைப் பற்றி?


‘இலவச டிக்கெட்’ கிடைத்திருக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick