மிஸ்டர் கழுகு: எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்!

ரபரப்பாக வந்த கழுகார், “நிவாரணப் பணிகளுக்காக நிறைய வேலைகள் இருக்கு... மடமடவெனக் கேளும்...” என்றபடித் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார். “15-ம் தேதி நள்ளிரவில் புயல். 22 மாவட்டங்களில் பாதிப்பு என்றாலும் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு. புயலால் மக்கள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அரசு விழாக்களில் பிஸியாக இருந்தார். கட்சியின் முக்கிய அமைச்சர்களும் நிர்வாகிகளும் போனில் எவ்வளவோ சொல்லியும், சொந்த ஊரில் விழாக்களை முடிக்காமல் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால், டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முதல்வர் மீது கடும் அதிருப்தியாம். ‘இங்கே மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்... அமைச்சர்களை மக்கள் ஓட ஓடத் துரத்துகிறார்கள்...  முதலமைச்சரோ, விழாக்களில் கலந்துகொண்டு ஆளுயர மாலை அணிந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்’ என்று முதல்வருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களே வருத்தத்துடன் கமென்ட் அடித்திருக்கிறார்களாம். இதைத்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வருக்கு இருப்பது இதயமா? இரும்பா?’ என்று கேட்டுள்ளார்.

“நியாயம்தானே?”

“தினகரனுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பித்து விட்டது. இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி காவல்துறை கொடுத்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றப் பத்திரிக்கையில் தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பி.ஜே.பி தரப்பில் சொல்லப்பட்ட சில நிபந்தனைகளுக்கு அவர் தலையாட்டவில்லை என்பதே நெருக்கடிக்குக் காரணமாம்...”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick