பி.ஜே.பி-க்கு எதிராக நாடார் அமைப்புகள்! - தவிக்கும் தமிழிசை...

சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்தி எழுதப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை, காங்கிரஸ் ஆட்சியைக் கடந்து இன்றைய பி.ஜே.பி அரசுக்கும் குடைச்சலைக் கொடுத்துவருகிறது. அந்தப் பகுதி நீக்கப்படாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள நாடார் அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்புச் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்தி எழுதப்பட்டிருப்பதாகக் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே சர்ச்சை வெடித்தது. இதை நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலரும் குரல் கொடுத்தனர். தொடர்ந்து, மத்திய அரசும் அது நீக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு இ்ன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறிச் சமீபத்தில் நாடார் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick