“புயல் எங்கள் உயிரையும் கொண்டுபோயிருக்கலாம்!” | Thanjavur people affected by Gaja cyclone - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“புயல் எங்கள் உயிரையும் கொண்டுபோயிருக்கலாம்!”

கண்ணீர் கடலில் தஞ்சை மக்கள்!

ஜா புயல் ஏற்படுத்திய ரணத்தைவிட, நிவாரணப் பணிகளில் அரசு காட்டும் அலட்சியமே தஞ்சை மாவட்ட மக்களுக்குப் பெரும் வேதனையை அளித்திருக்கிறது.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அதிராம்பட்டினம்,  முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு இங்கெல்லாம் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. டிரான்ஸ்ஃபார்மர்களும் விழுந்துள்ளன. முன் எச்சரிக்கையாகப் பல மணி நேரத்துக்கு முன்பாகவே மின்சாரம் நிறுத்தப்பட்டது. எனினும், வீடு இடிந்து விழுந்தது, மரம் விழுந்தது ஆகிய காரணங்களால் 16 மனித உயிர்கள் பறிபோயுள்ளன. மாடு உள்ளிட்ட கால்நடைகளும் செத்து மடிந்துவிட்டன. மின்சாரம் இல்லாததால் குடிநீர் பெரும் பிரச்னையாகியுள்ளது. ஜெனரேட்டர் இல்லாமல் மேல்நிலைத் தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் மக்கள் தவித்தனர். குறைகளைக் கேட்க அமைச்சர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை நான்கு நாள்கள் கழித்தே வந்தனர். இதனால், பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick