ஐந்து நாள்கள் சோறு, தண்ணீர் இல்லை!

புதுக்கோட்டை சோகம்

நா
கையில் புயல் நேரடியாகத் தாக்கியது என்றால், புதுக்கோட்டையில் நிலவரம் வேறு. இங்கெல்லாம் எங்கு புயல் வரப்போகிறது என்று ஆகாயத்தை ஆசுவாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். ஆனால், 15-ம் தேதி நள்ளிரவு இங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது கஜா. ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி, விராலிமலை, கட்டுமாவடி பகுதிகளில் இரண்டு லட்சம் ஏக்கர் மா, பலா, வாழை, தென்னை, சவுக்கு, தேக்கு, செம்மரம் உள்ளிட்ட தோப்புகள் அடியோடு சாய்ந்தன. மாவட்டத்திலிருந்து 60 சதவிகிதம் மரங்கள் இப்போது இல்லை. 40 சதவிகித மின் கம்பங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு முடக்கப்பட்டிருக்கிறது. வீடுகள் இடிந்ததாலும், மரங்கள் விழுந்ததாலும் 12 பேர் உயிரிழந்தனர். ஆடுகள், மாடுகள், கோழிகள் என 4,645 கால்நடைகள் மடிந்தன. 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு தரப்பில் சுமார் மூவாயிரம் பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், முதல் ஐந்து நாள்கள் சோறு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick