திண்டுக்கல்லுக்கு புயல் புதுசு!

திண்டுக்கல்லுக்கும் கொடைக்கானல் மலைக்கும் முதன்முதலாகப் புயல் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது கஜா புயல். இதற்கு முன்பு பெரும் காற்றும் வெள்ளமுமே திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பரிச்சயம். சிவகங்கை மாவட்டத்தைப் புயல் தொட்டபோதே நல்லவேளையாக திண்டுக்கல்லுக்கும் அலர்ட் கொடுத்தது அரசுத் தரப்பு. உடனடியாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட ஏழு துறைகளை ஒருங்கிணைத்து 81 குழுக்களை அமைத்தார் மாவட்ட ஆட்சியர் வினய். அப்படியும் திண்டுக்கல்லில் சுமார் நான்கு மணி நேரம் தாண்டவமாடித் தீர்த்தது புயல். ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. புயலின் சீற்றம் கொடைக்கானல் வரை சென்றதுதான் எதிர்பார்க்காத ஒன்று. கொடைக்கானல் மலைப்பாதை முழுவதும் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சிறுமலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் பூந்தோட்டங்கள் சேதமடைந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick