சாகடிக்கும் சாதி... எப்போது கிடைக்கும் நீதி? - நந்தீஷ் - சுவாதி படுகொலை...

வர்களுக்கு எங்கே வலிக்கிறது... இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் - சுவாதி. பெண்ணின் தந்தையும் உறவினர்களுமே இந்த ஆணவக் கொலையைச் செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick