“தண்ணீர் தராத அதிகாரிகள், டாஸ்மாக்கை திறந்தாங்க...” - திருவாரூர் கஜா புயல் சோகம் | Thiruvarur people affected by Gaja cyclone - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“தண்ணீர் தராத அதிகாரிகள், டாஸ்மாக்கை திறந்தாங்க...” - திருவாரூர் கஜா புயல் சோகம்

ஜா புயலின் கொடூரத் தாக்குதலால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி,  கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் மூன்று நாள்களாக மக்கள் தவிக்கிறார்கள். நெல் விளையும் பூமியில் உணவுக்கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். ஆனால், டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியது மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.  

மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் பிரதானச் சாலையில் கருவாக்குறிச்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், “புயல் தாக்கி இன்னையோட மூணு நாளாகுது. ஆனா இதுவரைக்கும் ஒரு அதிகாரிகூட எங்க ஊருக்கு வரல. தமிழக அரசோட எந்த ஒரு உதவியுமே எங்களுக்குக் கிடைக்கலை. வீடு இடிஞ்சு, எங்க ஊருல இரண்டு பேரு செத்துப் போயிட்டாங்க. அதை முறைப்படி அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தணும்னு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘செத்துப் போனவங்க பிணங்களையும் தூக்கிட்டு வாங்க’ன்னு வருவாய் ஆய்வாளர் சொல்லிட்டார். 12 கிலோமீட்டர் தூரம் பிணங்களை தூக்கிப்போயி, அவர்கிட்ட காட்டினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick