தினம் ஒரு தலைவர் சரணகோஷம்! - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...

பரிமலை சர்ச்சையை பி.ஜே.பி விடுவதாக இல்லை. சபரிமலைக்கு தினம் ஒரு தலைவரை அனுப்பி அரசியல் களத்தில் ‘ஸ்கோர்’ செய்யத் தயாராகிவிட்டது பி.ஜே.பி! 

இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவரான 53 வயது சசிகலா டீச்சர் நவம்பர் 16-ம் தேதி இருமுடிகட்டி சபரிமலைக்குச் செல்ல முயன்றபோது, மரக்கூட்டத்தில் அவரைக் கைது செய்தது கேரள போலீஸ். மறுநாளே இதேபோல் செல்ல முயன்ற பி.ஜே.பி-யின் கேரள மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன், நிலக்கல்லில் கைது செய்யப்பட்டார். உடனே, “பி.ஜே.பி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்  என்று தினம் ஒருவர் சபரிமலைக்கு வருவார்கள். முடிந்தால் அரசு தடுக்கட்டும்” என்று கேரள பி.ஜே.பி தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை அதிரடியாக அறிவித்தார். சொன்னதுபோலவே மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், எம்.பி முரளீதரன் சென்றனர். அப்போது அமைதி காத்தது போலீஸ். நவம்பர் 21-ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின்  வருகையால் மீண்டும் தொடங்கியது பிரச்னை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick