“மூவருக்கு ஒரு நீதி... எழுவருக்கு வேறு நீதியா?”

கவர்னர் மெளனத்துக்கு காரணம் மத்திய அரசு...

ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் கொலைக் குற்றவாளிகளை விடுதலைசெய்ய கவர்னர் மறுப்புத் தெரிவித்தும், விடாப்பிடியாக மீண்டும் பரிந்துரையை அனுப்பி, அவர்களை ரகசியமாக விடுதலை செய்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், ‘13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலைசெய்த கவர்னர், 28 ஆண்டுகள் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலையைத் தள்ளிப்போடுவதன் காரணம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுதான்’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1,627 கைதிகள் கவர்னர் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர். அதன்படி, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகளான நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை விடுதலை செய்ய முதலில் கவர்னர் மறுத்துவிட்டார். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மீண்டும் கவர்னருக்குப் பரிந்துரைத்தது. கவர்னர் இதை ஏற்றதால், மூவரும் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick