கழுகார் பதில்கள்!

ஆர்.பழனிசாமி, இராவணாபுரம்.
‘மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டது’ என்று நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் கூறியுள்ளாரே?


நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் அப்போது எதிர்ப்புகளைக் கிளப்பினார்கள். ஆனால், வளர்ச்சி என்னும் கவர்ச்சிப் பெரும்பாலானவர்களின் கண்களைக் கொள்ளைக் கொண்டதால், இன்னொரு பக்கம் சமுதாயத்தில் தொடரும் ஏற்றத்தாழ்வுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது, ஒட்டுமொத்த பிரஜைகளும் ஒரேமாதிரியான வளர்ச்சியை அடையும்போதுதான் உறுதியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick