மிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி!

றுகிப்போன முகத்துடன் வந்தார் கழுகார். “டெல்டா மாவட்டங்களில் மக்களின் துயரங்களைப் பார்க்கும்போது, நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. கடைக்கோடி கிராமங்களில் மாற்று உடைகூட இல்லாமல் மக்கள் ஒரு வாரமாகத் தவிக்கிறார்கள். நிவாரணப் பணிகள் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் இன்னும் பல கிராமங்களில் குடிநீருக்குக்கூட வழியில்லை. மின்சாரம் மீண்டும் வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

வி.ஏ.ஓ-க்கள் கூட பல கிராமங்களில் எட்டிப் பார்க்கவில்லை...” என்று படபடத்தார்.

“முதலில் தண்ணீரைக் குடியும்” என்று சற்றே அவரை ஆசுவாசப்படுத்திய பின்பு, “முதல்வரின் டெல்லி பயணம் எப்படி இருந்தது? பிரதமர் சந்திப்பில் என்ன பேசப்பட்டதாம்?” என்றோம்.

“புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிதியுதவிப் பட்டியலைக் கையோடு எடுத்துச் சென்றுள்ளார் முதல்வர். இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியும், நிரந்தரப் பணிக்காக ரூ.15,000 கோடியும் கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பிரதமர் தரப்பில், ‘நிவாரணப் பணிகளை வேகப்படுத்துங்கள். மத்திய அரசு வேண்டிய உதவிகளைச் செய்யும். மத்திய அரசின் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த பின்பு உதவிகள் குறித்து அறிவிக்கப்படும்’ என்று வழக்கமான வார்த்தைகளையே சொன்னார்களாம். அதைத் தாண்டி சில அரசியல் பேச்சுகளும் நடைபெற்றுள்ளன.”

“என்னவாம்?”

“பி.ஜே.பி தரப்பில் ‘தினகரனுடன் சேருவது குறித்துப் பரிசீலனை செய்யுங்கள்’ என்று சொல்லப்பட்டதாம். உடனே முதல்வருக்கு முகம் இறுகிப்போனாலும், ‘பரிசீலிக்கிறோம். போதுமான அவகாசம் தேவை’ என்று மட்டும் சொன்னாராம். யாரோ பி.ஜே.பி தரப்பில் பற்ற வைத்திருக்கிறார்கள் என்கிற கோபத்துடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் முதல்வர்.

“ஓஹோ...”

“ஆனால், முதல்வர் டெல்லி சென்றதையே தமிழக மக்கள் கோபத்துடன் பார்க்கிறார்கள்... ‘பாதிக்கப்பட்டவர்கள் நாம். அவர்கள்தான் முதலில் வந்து நம்மைப் பார்த்திருக்க வேண்டும்... விசாரித்திருக்க வேண்டும். அதன் பின்பே நம் முதல்வர் டெல்லிக்குச் சென்று நிதி கேட்டிருக்க வேண்டும். அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, ஜெயலலிதா வழியில் துணிவாக எந்த முடிவையும் இந்த அரசால் எடுக்க முடியவில்லை. டெல்லிக்குச் சென்று பவ்யம் காட்டுவது மட்டுமே இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக உள்ளது’ என்று மக்கள் நினைக்கிறார்கள்.”

“தனியார் நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொண்டிருக்கிறாரே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick