மினி மீல்ஸ்

மற்ற தலைவர்களைக் கண்டுக்கவே இல்லை!

தூ
த்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவரான ஏ.ஜே.ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். நாக்பூர் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணிகளை எடுத்து நடத்திவரும் ஸ்டாலினுக்கு, சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. குமரி மாவட்டம் முட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டாலின், தொழில் நிமித்தமாகப் பல மாநிலங்களுக்கும் பயணிப்பதால், பெரும்பாலும் அவர் தூத்துக்குடியில் இருப்பதில்லை. இதனால், அவரது பதவி நியமனத்தால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள், தூத்துக்குடியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு கார்கள் புடைசூழச் சென்று மாலை அணிவித்தார் ஸ்டாலின். ஆனால், அதன் பின்னர் வந்த காமராஜர், பெரியார், வ.உ.சி உட்பட எந்தத் தலைவரின் பிறந்தநாளையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகிகளுக்குத் திடீரென போன் செய்து, மறைந்த முன்னாள் நகரத்தந்தை குரூஸ்பர்னாந்துவின் சிலைக்கு மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை மாலை அணிவிக்க வைத்துள்ளார். ஸ்டாலின் தன் சொந்த சமூகத் தலைவரின் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்து மரியாதை செய்யச் சொல்வதாக, மன்றத்தில் உள்ள மற்ற சமூகத்தினர் குமுற ஆரம்பித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick