படை திரளும் ‘மகாகத்பந்தன்’

வரலாற்றிலிருந்து பாடம் கற்குமா புதிய கூட்டணி?- சக்திவேல்

மர்ஜென்சிக்குப் பிறகு, இந்திரா காந்திக்கு எதிராக நடந்த தேர்தலை நாடே எதிர்பார்த்தது. அதேபோன்ற அலை இப்போது கிளம்பியிருக்கிறது. இந்த முறை மோடிக்கு எதிராக யுத்தம் தயாராகிவருகிறது. படைத் திரட்டல்கள் வேகமெடுக்கின்றன. மோடி எனும் பலசாலியை எதிர்க்கும் படையின் அதிகாரபூர்வமற்ற பெயர், ‘மகாகத்பந்தன்’ (மெகா கூட்டணி). இன்னும் சில மாதங்களில், ‘முன்னணி’ என்றோ, ‘கூட்டணி’ என்றோ பெயரை எதிர்பார்க்கலாம். இது முதல் அணியா, இரண்டாம் அணியா என்பது தெரியவில்லை. ஆனால், முக்கிய அணி. அந்த அணியின் முகங்களாக  இருப்பவர்கள் இரண்டு பேர் ... சந்திரபாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி.

ஆந்திர அரசியல் வட்டாரத்தில், சந்திரபாபு நாயுடுவை ‘யூ - டர்ன் அரசியல்வாதி’ என்பார்கள். எவரை ஆதரிக்கிறாரோ, அவரையே எதிர்ப்பார். எவரை எதிர்க்கிறாரோ, அவரையே ஆதரிப்பார். என்ன... அல்வா கொடுப்பதற்குப் பதிலாக லட்டு கொடுப்பார். அவரிடம், முதல் லட்டு வாங்கிய அதிர்ஷ்டசாலி, அவரின் மாமனார் என்.டி.ராமாராவ். ‘அல்ட்ரா மாடர்ன்’ அரசியல்வாதி சந்திரபாபு நாயுடு, பில்கேட்ஸை ஹைதராபாத் துக்கு அழைத்துவந்து அசத்தினார். கூகுள் கம்பெனி அலுவலகம் திறக்கும் அளவுக்கு ஹைதராபாத் வளர்ந்தது. அந்த நகரம், இப்போது தெலுங்கானாவிடம் இருக்கிறது. அதனாலென்ன? அமராவதியை ‘பாகுபலி’ மாதிரி பிரமாண்டமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் நாயுடு. ‘விட்டதைப் பிடிக்காமல் விடமாட்டார்’ என்கிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick