காங்கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது! | Marxist Communist Party K.Balakrishnan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

காங்கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது!

கே.பாலகிருஷ்ணன் அதிரடி

மிழகத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி, தேசிய அளவில் பி.ஜே.பி-க்கு எதிராக மெகா கூட்டணி என்று பிஸியாக இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது தி.மு.க கூட்டணியில் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், களப்பணிகள் என்று பரபரப்பாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து...

‘‘பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி-யை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?’’

‘‘பி.ஜே.பி அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல் விலை உயர்வு என்று பொருளாதாரக் கொள்கைகளில் தவறான முடிவுகளை எடுத்து நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டது. ‘நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் பி.ஜே.பி ஆட்சியாளர்கள், ரஃபேல்  விமான ஊழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள். இந்த ஊழல் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி, மத்தியத் தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம், உச்ச நீதி மன்றம் என எல்லா சுயேச்சை அமைப்புகளிலும் மத்திய பி.ஜே.பி அரசு தலையிடுவதுடன், அவற்றைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலையீடு, ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் குறிப்பிட்ட மத நிறுவனமாக மாற்றுகிற முயற்சியாக உள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயர்களைக் கூட ‘இந்துத்வா’ அடிப்படையில் மாற்றிவருகிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பி.ஜே.பி-யை வீழ்த்துவது தேசத்துக்கும் மக்கள் நலனுக்கும் அவசியம். அதை நிச்சயம் செய்வோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick