சிக்கலுக்கு மேல் சிக்கலில் சி.பி.ஐ - முதல் அடி கொடுத்த சந்திரபாபு நாயுடு!

- சக்திவேல்

லகின் முன்னணி விசாரணை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்வதாகப் பெருமையுடன் தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறது சி.பி.ஐ அமைப்பு. ஆனால், சொந்த நாட்டில் அந்த அமைப்பு படும்பாட்டைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு, அதிகார மோதல் என்று சர்ச்சைகள் சுழன்றடித்துவரும் நிலையில், சி.பி.ஐ அமைப்பைத் தன் மாநிலத்தில் விசாரணை நடத்தத் தடைவிதித்து அதிரடி கிளப்பியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

மோடிக்கு எதிராக மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. எனவே, சந்திரபாபுவை அரசியல்ரீதியாக முடக்க, மத்திய அரசு சி.பி.ஐ உள்ளிட்ட சில அமைப்புகளைத் தூண்டிவிடலாம் என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்வதுபோலவே, சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளரும், தெலுங்குதேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பி-யுமான சி.எம்.ரமேஷுக்கு சொந்தமான ஹைதராபாத், கடப்பா ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அக்டோபர் 12-ம் தேதி வருமானவரிச் சோதனைகள்  நடைபெற்றன. ‘மத்திய அரசில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியதன் காரணமாகவே இந்த ரெய்டு நடந்தது’ என்று சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்தார். மேலும், எப்போது வேண்டுமானாலும் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அமைப்புகள் தன் வீட்டில்கூடச் சோதனைகள் நடத்தலாம் என்றும் சந்திரபாபு நாயுடு கருதுகிறார். இதற்கு செக் வைக்கும் வகையில்தான், இப்போது சி.பி.ஐ-க்கு ஆந்திர மாநிலத்தில் தடை போடப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick