வக்கத்துக் கெடக்குறோமே... | Yugabharathi poetry about Gaja cyclone - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வக்கத்துக் கெடக்குறோமே...

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வானம் மழபொழிஞ்சா
வயக்காடு வெளையுமுன்னு
வாயப் பொளந்த சனம்
வக்கத்துக் கெடக்குறோமே!

ஏருழுது நட்ட நெலம்
எதையாச்சும் கொடுக்குமுன்னு
ஊரே நெனச்சிருக்க
உருக்குலைஞ்சு துடிக்குறோமே!

தானம் தருமமின்னு
தலைநிமிந்த ஒருகூட்டம்
கையேந்தும் கொடுமையில
கண்ணீர வடிக்கிறோமே!

அண்ணாந்த மரமெல்லாம்
மல்லாந்து சரிஞ்சிருச்சு
திண்ணவூடும் இடிஞ்சிவிழ
தெருவோரம் படுக்குறோமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick