அடிப்படை உரிமைகளை மீறும்... அந்தரங்கத்தை வேவுபார்க்கும்! - ரவிக்குமார்

‘நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது வாழ்க்கையை வடிவமைத்த முடிவுகள் – நமக்கு வேலை கொடுப்பதா இல்லையா, காப்பீடு வழங்குவதா இல்லையா, கடன் கொடுப்பதா இல்லையா என்பவை உள்ளிட்ட முடிவுகள் - மனிதர்களால் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் எந்திரகதியாக நடந்துகொண்டார்கள் என்றபோதிலும் அவை மனித உணர்வுகள் சார்ந்தவையாக இருந்தன. டிஜிட்டல் யுகம் பிறந்ததிலிருந்து இந்த முடிவுகள் யாவும் ஆட்டோமேட்டிக்காக செயல்படும் தானியங்கி எந்திரங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

தானியங்கி எந்திரங்கள், அவற்றுக்கான அல்கோரிதம்கள்... அவைதான் இப்போது எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. யாரைக் கண்காணிப்பது, எந்தெந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது, யாருக்கு வேலை தருவது, யாரைப் புலனாய்வு செய்வது – என எல்லாவற்றையும் இப்போது எந்திரங்கள்தான் முடிவு செய்கின்றன’ – இப்படி, வர்ஜினியா யூபேங்க்ஸ் என்ற அமெரிக்கர் தனது ‘ஆட்டோமேட்டிங் இன்ஈக்குவாலிட்டி’ என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ளார். இதே வார்த்தைகளை நாம் கூறப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அந்த அபாயத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இந்தத் தீர்ப்பு நமது வாழ்க்கை முறையையே மாற்றப் போகிறது. அமெரிக்காவைப்போல முன்னேறிய நாடாக மாறுவதற்கு அது உதவப்போவதில்லை. மாறாக, அமெரிக்காவைப்போல டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்து அதிகாரம் செலுத்துவதற்கு நமது ஆட்சியாளர்களுக்கு அது கைகொடுக்கப்போகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick