மலேசிய மணல்! - அந்தர்பல்டி அடித்த அரசு

மிழக ஆறுகளில் மணல் கொள்ளை உச்சத்தில் இருந்த நேரத்தில், நீதிமன்ற உத்தரவால் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டன. அதனால், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலையும் தாறுமாறாக உயர்ந்தது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடு கட்டுவோர் மணலே கிடைக்காமல் திண்டாடும் சூழலில், மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்தது ஒரு நிறுவனம். இதேபோன்ற இறக்குமதியை கர்நாடக அரசு ஊக்குவித்து, மணலை விற்பனை செய்துவருகிறது. ஆனால், ‘மலேசிய மணல் தரமற்றது’ என்று பயமுறுத்திய தமிழக அரசு, இப்போது அந்தர்பல்டி அடித்து மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய, தானே டெண்டர் விட்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதுதான், அரசியல் வட்டாரங்களில் இப்போது நடைபெறும் ஆராய்ச்சி.

புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 55,000 டன் மணலை இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கிய அந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்கவில்லை. ‘‘அதில் சிலிகான் கலந்துள்ளது. அது தரமற்ற மணல்” என்று முதல்வரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறினார். அந்த நிறுவனம் வழக்கு போட்டபிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அந்த இறக்குமதி மணலை வாங்கி, தமிழகப் பொதுப்பணித் துறை மூலம் விற்க  சம்மதம் தெரிவித்தது தமிழக அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick