“அவர் சசிகலா மேடத்தின் விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி!”

தினகரனை கலாய்த்த விஜயபாஸ்கர்

டப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துக் கொண்டால்கூட நன்றாகப் பேசிக்கொள்வார்கள் போல... புதுக்கோட்டையில் அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் முரட்டு மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாவட்டத்தையே தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரே இதற்குக் காரணம். புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தமுடியாதபடி விஜயபாஸ்கர் தடை போட்டார். நீதிமன்ற ஆணை பெற்றுக் கூட்டம் நடத்திய தினகரன், தன் பேச்சில் விஜயபாஸ்கரை ‘குட்கா டாக்டர்’ என்று வறுத்தெடுத்தார். ‘‘ஒரு லட்சம் பேரைக் கூட்டிப் போட்டிக்கூட்டம் நடத்திச் சிலரின் முகத்திரையைக் கிழிப்பேன்’’ என ஆவேசமாகச் சொன்னார் விஜயபாஸ்கர்.

இந்நிலையில், ‘குட்கா ஊழலில் தொடர்புடைய விஜயபாஸ்கர் பதவிவிலக வேண்டும்’ என செப்டம்பர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய தி.மு.க நிர்வாகிகள், விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அரிமளம் ஒன்றிய தி.மு.க செயலாளர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். விராலிமலை ஒன்றியச் செயலாளர் தென்னலூர் பழனிசாமியை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. ராமலிங்கத்தின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பழனிசாமியின் பெட்ரோல் பங்க் ஆகியவற்றின்மீது அ.தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick