நான் அழைத்தால் எடப்பாடி ஓடோடி வருவார்!

திருவாரூரில் திகில் கிளப்பும் காமராஜ்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லை. அதற்குள்ளாகவே, இந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களை முன்வைத்து அரசியல் சவடால்கள் ஆரம்பித்துவிட்டன. டிசம்பர் மாதத்தில் தேர்தலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவதால், அரசியல் கட்சிகள் இந்தத் தொகுதிகளில் பரபரப்புடன் பணிகளைத் தொடங்கிவிட்டன. கருணாநிதி தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்ததால் வி.ஐ.பி தொகுதியாக மாறிப்போன திருவாரூர் தொகுதியைக் கைப்பற்ற, முக்கியக் கட்சிகளுக்குள் இப்போதே போட்டி தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick