“மழையில் நனையத்தான் 300 ரூபாய் கொடுத்தொம்!” | ADMK meeting against DMK in all Districts - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“மழையில் நனையத்தான் 300 ரூபாய் கொடுத்தொம்!”

மக்களை மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகிகள்

‘ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்பதை முழக்கமாக வைத்து, ‘திடீர்’ ஈழப்பாசத்துடன் அ.தி.மு.க சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ‘நாக்கை அறுத்துவிடுவேன் ஜாக்கிரதை’ என ஸ்டாலினை தஞ்சாவூரில் எச்சரித்து மிரள வைத்தார் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு. இப்படி பரபரப்பக் வைத்த கூட்டங்களில் இருந்து சில ‘நறுக்’குகள்!

சேலம்:

சேலத்தில் கண்டன உரையாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘‘அண்மையில் இங்கு ஸ்டாலின் வந்தார். ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க தவறு செய்வதைப் போல சொல்லியிருக்கிறார். அந்தப் பொய்யை அம்பலப்படுத்தவும் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்று உண்மையைச் சொன்ன எடப்பாடி, ஸ்டாலினை ஒருமையில் பேசி, கடுமையாக விமர்சனம் செய்தார். ‘‘செயல்பட முடியாத தலைவருக்குப் பெயர் செயல் தலைவர். தி.முக கட்சியல்ல... அது ஒரு கம்பெனி. அவர்களே அமைச்சர் ஆவார்கள். அவர்களுக்குப் பின்பு அவர்களின் வாரிசுகளே அமைச்சர் ஆக முடியும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சியைப் பிளவுபடுத்த முயற்சி செய்தார்கள். முடியவில்லை. இப்போது எங்கள்மீது அபத்தமாக ஊழல் குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். அது பலிக்காது. உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள். உங்கள் குடும்பச் சண்டையைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது’’ என்ற எடப்பாடி, தன் சம்பந்தி நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுத்தது பற்றி மீண்டும் ஒருமுறை விளக்கம் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick