மூன்று இடங்களில் ஓட்டு! - எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டு? | ADMK T.Nagar MLA has three Voter ID in Different places - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மூன்று இடங்களில் ஓட்டு! - எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டு?

ருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர்மீது ஊழல் புகார்கள்... மற்றொரு பக்கம் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு என்று தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு தலைக்கு மேல் பல கத்திகள் தொங்குகின்றன. இந்நிலையில், ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தமிழகத்திலும் ஆந்திராவிலும் மூன்று இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த முறைகேடு, அவரின் எம்.எல்.ஏ பதவியையே பறிக்கும் அளவுக்கு மோசமானது. இந்த மோசடியை வெளிப்படுத்தியுள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்கம், இதை வைத்து அவரது எம்.எல்.ஏ பதவியைப் பறிக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது.

அ.தி.மு.க-வின் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன். இவர், கதவு எண் 16/2, பரமேஸ்வரி காலனி, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம் என்ற முகவரியில் வசிப்பதாக, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டையும் (எண்: LMG 4367306) வாங்கியுள்ளார். இந்த அடையாள அட்டையை வைத்துதான், 2011-2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆனார்். 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அ.தி.மு.க சார்பில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டமன்றத் தொகுதியிலும் சென்னையில் வடபழனியிலும் கூடுதலாக இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக புகார் கிளப்பியுள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick