என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (விருதுநகர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“எங்க எம்.பி-யைப் பாத்தீங்களா?” - வெடிக்காத பட்டாசு!

#EnnaSeitharMP
#MyMPsScore

க்களுக்கு நன்கு அறிமுகமான அரசியல் தலைவரான வைகோ, வர்த்தகர்கள் மத்தியில் நன்கு தெரிந்த ரத்தினவேலு, சுறுசுறுப்பான செயல்பாட்டால் மக்களின் மனம்கவர்ந்த மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் நிற்க... இவர்களையெல்லாம் நிராகரித்துவிட்டு விருதுநகர் வாக்காளர்கள் எம்.பி ஆக்கியது, மக்களால் அறியப்படாத ராதாகிருஷ்ணனை. யூனியன் சேர்மனாகவும், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருந்த காலத்தில்கூட கட்சியினருக்கே தெரியாத நபராக இயங்கியவர். ஊரில் இருந்தால் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வார். மைக் பிடிக்க மாட்டார். யாரையும் சந்திக்க மாட்டார். விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் தன் எல்லைக்குள் இருந்தாலும், சிவகாசியைவிட்டு எங்கும் செல்ல மாட்டார். அப்படிப்பட்டவர், விருதுநகர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்? தொகுதியை வலம் வந்தோம்.

‘‘மற்ற தொகுதிகளின் மக்களைப் போல, ‘எம்.பி-யிடம் மனு கொடுத்தேன், கோரிக்கை வைத்தேன்... அதை நிறைவேற்றவில்லை’ என விருதுநகர் தொகுதியில் யாரும் புலம்ப முடியாது. எம்.பி-யை சந்திக்க முடிந்தால்தானே கோரிக்கை வைக்க முடியும்... மனு கொடுக்க முடியும். அதற்கான வாய்ப்புகளையே அவர் உருவாக்கவில்லை. தொகுதிக்குள் எந்த ஒரு நகரிலும் எம்.பி-க்கு என்று அலுவலகம் கிடையாது. ‘சரி, வீட்டிலாவது அலுவலகம் இருக்கிறதா’ என்றால் அங்கும் இல்லை. சாதரணமாக ஒரு வார்டு கவுன்சிலர் வீட்டு முன்புகூட கட்சிக்காரர்களும் பொதுமக்களும் வந்துசெல்வதைப் பார்க்கலாம். ஆனால், சிவகாசி சாட்சியாபுத்தில் இருக்கும் ராதாகிருஷ்ணன் வீடு அமைதியாகக் காட்சி தருகிறது. அது எம்.பி வீடு என்பதற்கான எந்த அறிவிப்பும் அங்கு இல்லை’’ என எடுத்த எடுப்பிலேயே டாப் கியரைப் போட்டார்கள் தொகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick