‘இத்தனைப் பேரு இருந்தும் என்னைக் காப்பாத்த யாருமே வரலையேம்மா!’ | 15 years boy killed in Karur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘இத்தனைப் பேரு இருந்தும் என்னைக் காப்பாத்த யாருமே வரலையேம்மா!’

சிறுவனை அடித்தே கொன்ற கொடூரம்

னிதத்தன்மையற்ற கொலைவெறித் தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் விரைவில் சேர்ந்துவிடும் போலிருக்கிறது. திருவண்ணாமலையில் கோயிலுக்கு வழிகேட்ட மூதாட்டியை அடித்துக் கொன்றது, பழவேற்காட்டில் ஊருக்குள் சுற்றித் திரிந்த நபரை அடித்துக் கொன்றது என நடந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக கரூரில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம். 15 வயது சிறுவனை, செல்போனைத் திருடியதாக ஊர் நடுவே கட்டி வைத்து கண்களிலும் வாயிலும் மிளகாய்ப் பொடியைத் தடவி, உருட்டுக்கட்டையால் கொடூரத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்கள், அந்தச் சிறுவனை குழந்தைப் பருவத்திலிருந்து நன்கு அறிந்த அக்கம்பக்கத்தினர் என்பதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick