ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், குருமூர்த்தி... க்ளைமாக்ஸை நெருங்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை ஆரம்பித்து ஓர் ஆண்டாகிவிட்ட நிலையில், அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் திருப்பங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆணையத்தில் இதுவரை சாட்சியம் அளித்தவர்களின் எண்ணிக்கை சதமடித்து விட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 27-ம் தேதி முதல் குறுக்குவிசாரணை வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, நான்கு நாட்களில் 40 சாட்சிகளைக் குறுக்குவிசாரணை செய்துள்ளார் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆரம்பத்தில் சந்தேகத்தை எழுப்பியவர்களில் முதன்மையானவர், முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன். ஓ.பி.எஸ் ஆதரவாளரான அவர், ஆணையம் ஆரம்பித்தபோதே தனது முதற்கட்ட சாட்சியத்தைப் பதிவுசெய்திருந்தார். கடந்த வாரம் அவர் இரண்டாவது முறையாக ஆணையத்தில் ஆஜரானபோது, “ஜெயலலிதா, போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாகச் சொன்னது ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல... யூகத்தின் அடிப்படையில்தான். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட அன்றும், அதற்குப் பிறகு இரண்டு நாள்களும் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ய வேண்டும். அப்போலோவில் ஜெயலலிதா இருப்பதாக வெளியிடப்பட்ட வீடியோ போலியானது. அதை தடயவியல் துறையின் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick