சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி... | Landmark Judgment of Sexual Assault Case in Chennai High Court - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

வழக்கு எண்: 18/9 ஸ்டைலில் ஒரு நிஜம்!

‘குழந்தைகளுக்கு மிக மோசமான அச்சத்தை, அவர்களை உச்சபட்சமாக அலறவைக்கும் சம்பவங்கள் தருவதில்லை. மாறாக, அவர்களின் குரலைத் திருடி மௌனமாக்கிவிடும் சம்பவங்களே மிகுந்த அச்சம் தருகின்றன’ என்ற அபி நார்மனின் கூற்றுடன் ஆரம்பமாகிறது அந்தத் தீர்ப்பு. ‘ஒரு குழந்தைக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி, பாலியல் வன்கொடுமை நிகழும் சூழலை இந்த சமூகமோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ உருவாக்கிவிடுகின்றனர். ஆனால், இந்த வழக்கில் குழந்தையின் அலறலை மௌனமாக்கியவை நான்கு விஷயங்கள். தவறான ஆவணங்களை உருவாக்கினர்; பொய்க் குற்றவாளியை போலீஸே தேர்ந்தெடுத்தது; குற்றவாளியை சாட்சியாகவும், சாட்சியைக் குற்றவாளியாகவும் மாற்றினர்; இந்த எல்லா தவறுகளுக்கும் அதிகார மையங்களை சம்மதிக்கவைத்தனர்’ என்று காட்டமாகக் குற்றம்சாட்டுகிறது அந்தத் தீர்ப்பு.

ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு பெண் நீதிபதிகளான எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பு, மிக முக்கியமான குற்ற இலக்கியம் போல அமைந்திருக்கிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்பினரும், குழந்தைகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் போலீஸாரும், எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அவசியம் படிக்கவேண்டிய தீர்ப்பு இது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick