இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை? | Monsoon rain in Chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

சென்னையில் ஒரு மழைக்காலம் என்றால்... கவிதை, சூடான பஜ்ஜி, குடை, இளையராஜா பாடல்கள் எனக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்களை, 2015-ம் ஆண்டு ஓர் உலுக்கு உலுக்கியது. அந்த ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெருமழைக்குப் பிறகு, மழை கொஞ்சம் வலுத்தாலும் என்ன நடக்குமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளுக்கு அதிகம்.

அந்த மழை, நிறைய பாடங்களைச் சொல்லிக்கொடுத்தது. சென்னையில் எவ்வளவு நீர்நிலைகள் இருந்தன என்பதை அடையாளம் காட்டியது. சக மனிதன்மீதான அக்கறை அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தியது; நம்மைக் காக்க வேண்டிய அரசின் அலட்சியத்தை, மெத்தனப்போக்கை அம்பலப்படுத்தியது; வாழ்வாதாரத்துக்குத் துடிப்பவன்மீது ஏறிநின்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அற்பத்தனத்தையும் வெளிக்காட்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick