“புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது!”

கொந்தளிக்க வைத்த பல்கலைக்கழக துணைவேந்தர்

‘‘புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட இருக்கும் பாடப் பிரிவுகளில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு கிடையாது” என்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங்கின் அறிவிப்பால் கொதித்துக் கிடக்கிறது புதுச்சேரி. ஏற்கெனவே புதுச்சேரியில் மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பதாகக் குற்றச்சாட்டுகள் சூறாவளியாகச் சுழன்றடிக்கும் நிலையில், துணைவேந்தரின் நிலைப்பாடு மாணவர்களை மட்டுமல்லாமல், மாநில அரசையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் காலாப்பட்டில் இயங்கிவரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுமார் ஆறாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்; இதன் உறுப்புக் கல்லூரி மற்றும் தொலைதூரக் கல்வி நிலையங்களில் சுமார் 60,000 மாணவர்கள் படிக்கிறார்கள். பேராசிரியர்களுக்குள் மோதல், நிரந்தரத் துணைவேந்தர் இல்லாதது, பல்கலைக்கழகத்துக்குள் இந்துத்துவா திணிப்பு என்று தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கிவரும் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்புதான் நிரந்தரத் துணைவேந்தராக குர்மீத் சிங் நியமிக்கப்பட்டார். ஆனால், இடஒதுக்கீடு குறித்த அவரது நிலைப்பாடு புதுச்சேரியைத் தகிக்க வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick