“வெண்புள்ளிக்காக வேலையைப் பறிப்பதா?”

‘சமயம், சாதி, பால், இனம் மற்றும் நிறம் அடிப்படையில் எவரையும் வேறுபடுத்தக் கூடாது’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்தப் பட்டியலில் நோய்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘வெண்புள்ளி என்பது நோயே அல்ல. அதைக் காரணம் காட்டி யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது’ என அரசாணையே உள்ளது. ஆனால், உடலில் வெண்புள்ளிகள் தோன்றியதற்காக அரசுப் பணியிலிருந்து ஒருவரைப் பணிநீக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே இருக்கிறது குடியநல்லூர். இங்கு பொதுக்குடிநீர் விசைப்பம்பு ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர் பொன்னுசாமி. திடீரென இவரது உடலில் வெண்புள்ளிகள் தோன்றின. அதனால், இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். இதுகுறித்து அவர் ‘ஜூ.வி ஆக்‌ஷன்’ பகுதிக்குப் புகார் அனுப்பினார். உடனடியாக குடியநல்லூர் புறப்பட்டோம். ஊருக்கு வெளியில் இருக்கிறது பொன்னுசாமியின் வீடு. எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் கூரை. செங்கற்களால் முட்டுக்கொடுக்கப்பட்ட கயிற்றுக் கட்டில், கிழிந்த பாய், சில பாத்திரங்கள்... இவற்றின் நடுவில் ஒடுங்கிக் கிடக்கிறார் பொன்னுசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick