விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர் | Viralimalai Tahsildar died in accident - Junior Vikatan | ஜூனியர் விகடன்

விபத்தா... மர்ம மரணமா? - மணல் கொள்ளை புதிர்

ருவாய்த் துறையினர், காவல்துறையினர், அரசியல் கட்சியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள் என மணல்கொள்ளையைத் தடுக்க முயன்ற பலரும் கொலை செய்யப்பட்ட கொடூரம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது, மணல்கொள்ளையைத் தடுக்க முயன்ற விராலிமலை தாசில்தார் பார்த்திபன் விபத்தில் மரணமடைந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாசில்தாராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மணல்கொள்ளைக்கு எதிராக செயல்பட்டுவந்தார் பார்த்திபன். விராலிமலையை அடுத்த வில்லாரோடை மற்றும் ஆவூர் கோரையாற்றில் மணல் கடத்தப்படுவதாக செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு தாசில்தார் பார்த்திபனுக்குத் தகவல் வந்துள்ளது. உடனே அவர், வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, குன்னத்தூர் கிராம உதவியாளர் பால்ராஜ், அலுவலக உதவியாளர் மதியழகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick