ஜெயலலிதா சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்ய முடியும்! | Karnataka Lawyer P.V.Acharya interview about Jayalalitha assets - Junior Viktatan | ஜூனியர் விகடன்

ஜெயலலிதா சொத்துகளை தமிழக அரசு பறிமுதல் செய்ய முடியும்!

ஆச்சார்யா அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிப்பது தொடர்பாக, கர்நாடக அரசின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம், சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர்மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கான தண்டனை விடுவிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் சொன்னது.

இதை எதிர்த்துக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உத்தரவிடக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். ‘வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டபோதுதான் ஜெயலலிதா உயிரிழந்தார். எனவே, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது தவறு. அவரைக் குற்றவாளி என அறிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 29-ம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஆரம்பம் முதல் கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த பி.வி.ஆச்சார்யாவைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick