‘ஆக்கிரமிப்பு’ பல்கலைக்கழகத்துக்கு ஆதரவு தருகிறதா தமிழக அரசு?

ஞ்சையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ஆக்கிரமித்துள்ள அந்த இடத்தைக் காலிசெய்யவில்லை. தமிழக அரசோ, அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தைக் கையகப்படுத்த முனைப்புக் காட்டவில்லை. இந்நிலையில், பல்வேறு திரைமறைவு நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரம் என்ற இடத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்ற தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 12,000 மாணவர்கள் படித்துவருகிறார்கள். முன்பு,  சண்முகா பாலிடெக்னிக் என்ற பெயரில் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்டது. பின்னர் நாளடைவில் திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து  சாஸ்த்ரா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இதை எதிர்த்து இந்தப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவர், “திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, தரிசு நிலம் மற்றும் வாரிப் புறம்போக்கு என 58.17 ஏக்கர் அரசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் நிர்மண் விஹார் என்ற வளாகம், ஐந்து மகளிர் விடுதிகள், இரண்டு நூலகங்கள் மற்றும் சட்டக்கல்லூரி வளாகம் என பல கட்டடங்களைக் கட்டியுள்ளனர். இதை எதிர்த்து, 2001-ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு நிலத்தை மீட்க வலியுறுத்திக் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலரான கருணாகரன், அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தார். ‘ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்குப் பதிலாக, மாற்று இடம் தருகிறோம்’ என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது. மேலும் அவர்கள், ‘ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை எங்கள் பெயருக்கு உரிமை மாற்றம் செய்து கொடுங்கள்’ என வருவாய்த் துறையிடம் மனு கொடுத்தனர். அதை அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick