“ஐயாம் வெயிட்டிங்!” - விஜய் போடும் சர்கார் கணக்கு

ரசியல் அரங்கில் ஆளுமைகள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓர் அதிர்வு உண்டு. சிலரது வார்த்தைகள் களத்தை அசைத்துப் பார்க்கும். சிலரது வார்த்தைகள் ‘மீம்ஸ்’ ஆகிப்போகும். சிலரது வார்த்தைகள் தீப்பொறியாய் பற்றி, அரசியலையும் ஆட்சிக் கட்டில்களையுமே புரட்டிப்போடும். நடிகர் விஜய் ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் உச்சரித்திருக்கும் வார்த்தைகள் தீப்பொறி ரகம். அ.தி.மு.க., தி.மு.க., தினகரன், ரஜினி, கமல்... என பல தரப்புகளும் போடும் அரசியல் கணக்குகளுக்கு இடையே விஜய் போடும் சர்கார் கணக்கு சரிவருமா, சறுக்கிவிடுமா? இப்படி விஜய் கணக்கு போடுவதன் நிஜப் பின்னணி என்ன?

“எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். நாம் சர்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கப்போகிறோம். புழுக்கத்துக்குப் பின் மழை வருவது போல, நெருக்கடி நெருங்கும்போது அடிபட்டு நல்லவர்கள் முன்னே வருவார்கள்; அதுதான் இயற்கை. அப்படி வரும் ஒருவருக்குக் கீழே ஒரு சர்கார் வரும். நான் முதல்வரானால் நிஜத்தில் நடிக்கமாட்டேன்” - இவை எல்லாம் ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கொளுத்திப்போட்ட அரசியல் சரவெடிகள். சும்மாவே விஜய் ரசிகர்கள் தங்களது பேச்சைத் தாங்களே கேட்க மாட்டார்கள். விஜய் இப்படி கொளுத்திப்போட்டால் விடுவார்களா... பட்டாசு வெடிக்காததுதான் பாக்கி. ஏகத்துக்கும் உற்சாகம் ஏறிக்கிடக்கிறார்கள்.

அவரின் மக்கள் இயக்கத்தினர், “இத்தனை நாட்களாக எங்கள் இயக்கத்துக்குள் பேசிவந்ததை இப்போது பொதுவெளியில் பேசியிருக்கிறார். இது உணர்ச்சிவசப்பட்ட பேச்சு அல்ல, எங்கள் தளபதி நின்று நிதானமாக, ஒவ்வொரு அடியாக அழுத்தமாக எடுத்து வைக்கிறார். இதை அவரது அரசியல் பிரகடனமாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்றபடி இயக்கத்தின் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மக்கள் இயக்கத்தினர், விஜய்க்கு நெருக்கமானோரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick