கழுகார் பதில்கள்! - 18 நாள்களில் புது வீடு!

ஜி.குமார், உளுந்தூர்பேட்டை.
சமீபத்தில் கழுகாரை நெகிழவைத்த சம்பவம்?


கேரள வெள்ளத்தில் விஷ்ணுவின் வீடு சிதைந்து நொறுங்கிவிட்டது. வீல்சேரில் முடங்கியிருக்கும் மாற்றுத் திறனாளி மாணவன், விஷ்ணு. தனக்கு மீண்டும் வீடு எப்போது கிடைக்கும் என புரியாத குழப்பத்தில் தவித்த விஷ்ணு, இப்போது நிம்மதியில் மிதக்கிறான். பரவூர் பகுதியில் பழைய வீடு இருந்த இடத்தில் செப்டம்பர் 15-ம் தேதி கட்ட ஆரம்பித்து, வெறும் 18 நாள்களில் வீட்டைக் கட்டிமுடித்து சாவியை விஷ்ணுவின் குடும்பத்திடம் வழங்கிவிட்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஸன் வழங்கிய ரூ. 1.25 லட்சம் நிதியில், ப்ரீஃபேப்ரிகேடட் கான்க்ரீட்டைப் பயன்படுத்தி, 504 சதுர அடியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் கட்டித் தருவதற்கு ‘மாடல் வீடு’ போல இதைக் கேரள அரசு கருதுகிறது. சுனாமியில் பாதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் வீடு கிடைக்காமல் போராடிவரும் தமிழக மீனவர்களின் நினைப்பு வந்தது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick