‘கிளம்புங்கள் கிராம சபைக்கு!’ - களம் இறங்கிய கமல் | Kamal and his party participates in a Grama Sabha meetings - Junior vikatan | ஜூனியர் விகடன்

‘கிளம்புங்கள் கிராம சபைக்கு!’ - களம் இறங்கிய கமல்

ந்திய கிராமங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் காந்தியின் ஆன்மாவை மெல்லத் தட்டி எழுப்பிவருகிறார்கள் இளைய தலைமுறையினர். ஆம், தமிழகத்தில் கிராமசபை மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் நிலையில், காந்தியின் 150-வது பிறந்தநாள் அன்று தமிழகத்தில் கணிசமான கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் இளைஞர்கள். கூடுதல் பலமாக, சமீப காலமாக கிராமசபைக் கூட்டங்களை முன்னின்று நடத்துவதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டுவதால், காந்தியின் கனவான பஞ்சாயத்து ராஜ்ஜியம் உயிர்பெற்றுவருகிறது.

முன்பாக சில அடிப்படை விஷயங்கள்; கிராமசபைக் கூட்டங்களை மாதம்தோறும் அல்லது கிராமங்களின் தேவைகளுக்கேற்ப நடத்திக்கொள்ளலாம் என்றாலும், தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த நாள் ஆகிய நாள்களில் கட்டாயமாக கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தக் கூட்டங்களில் கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து ஆலோசித்து, தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்ததாக மூன்றாவது அடுக்கில் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் கிராமசபைக் கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தீர்மானங்களுக்கு இணையான அதிகாரத்தை இந்திய அரசியல் சாசனத்தின் 73-வது சட்டத் திருத்தம் அளித்திருக்கிறது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் அதிகாரப் பரவலுக்குத் தயாராக இல்லாததால், மேற்கண்ட சட்டத் திருத்தத்தின் பலன்கள் முழுமையாக கிராமங்களைச் சென்றடையவில்லை. தவிர, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்தலை நடத்தாமல் இந்திய அரசியல் சாசனத்தையே கேலிக்குரியதாக்கிவிட்டனர் தமிழக ஆட்சியாளர்கள். இந்தச் சூழலில், தமிழகத்தில் நடந்த சில கிராமசபைக் கூட்டங்களைப் பார்ப்போம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick