ஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா! | Hydrocarbon project has been signed in the presence of Petroleum Minister - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஒற்றை அனுமதியில் பாலைவனமாகும் காவிரி டெல்டா!

ச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்வதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை தாறுமாறாக எகிறுகிறது. இன்னொரு பக்கம், ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. உலகில் எரிபொருளை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இது, பிரச்னையை இன்னும் தீவிரமாக்குகிறது. உள்நாட்டில் கச்சா எண்ணெயையும் ஹைட்ரோ கார்பனையும் உற்பத்தி செய்வதுதான் இதற்குத் தீர்வு என நம்பும் மத்திய அரசு, அதற்காக பல விதிகளைத் தளர்த்தி, சில விதிகளை மாற்றி, பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. ‘இது பெட்ரோலிய இறக்குமதியை ஓரளவு குறைக்கலாம். ஆனால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய பாலைவன நாடாகிவிடுவோம்’ என எச்சரிக்கிறார்கள் விவசாயிகள்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக அரசு தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகிறது. இதற்கு மாறாக மத்திய அரசு, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை அக்டோபர் 1-ம் தேதி இறுதி செய்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவது உறுதியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick