“அடுத்த 20 ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் புக்கிங்!” - துணைவேந்தர் நியமன ஊழல்

‘‘பல கோடி ரூபாய் கொடுத்து, துணைவேந்தர் பதவிகள் வாங்கப்படுகின்றன. நான் வந்த பிறகுதான் அதை மாற்றித் தகுதியான துணைவேந்தர்களை நியமித்துள்ளேன்’’ - இப்படிச் சொல்வது எதிர்க்கட்சியினரோ, கல்வியாளர்களோ அல்ல. பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். சென்னையில் நடந்த உயர்கல்விக் கருத்தரங்கில் அவர் இப்படிக் கூறியுள்ளது ஆளும்கட்சியை அதிர வைத்துள்ளது. ‘‘துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பில்லை’’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும், “அது யாரென்று  பெயரைக் குறிப்பிட்டு கவர்னர் சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அமைச்சர் ஜெயக்குமாரும் மழுப்பலாகத் தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோஹித் வீசிய குற்றச்சாட்டு கடந்தகால ஆட்சியாளர்களுக்கும் சேர்த்துதான். நீண்டகாலமாக துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறுவதையும், அதன் மூலம் தகுதியில்லாத நபர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகப் பணியாற்றுவதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இதை அம்பலப்படுத்தி வருகின்றன. ஆனால், அதை ஆளும்கட்சி சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. இப்போது கவர்னர் போட்டு உடைத்ததும்   பதறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்