பாண்ட்ஸ் சோகம்! - அறக்கட்டளையில் ரூ.2,000 கோடி... ஆதரவின்றி நிற்கும் தொழிலாளர்கள்...

‘கனவுப்பூக்களின் நறுமணம்’ என பாண்ட்ஸ் பவுடர் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் விற்கப்படுகின்றன. அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கோ, வாழ்க்கையே கனவாக ஆகியிருக்கிறது. பாண்ட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், பாண்ட்ஸ் தொழிலாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட அறக்கட்டளையில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அபகரிக்க நினைப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தவிர, முன்பு பாண்ட்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த தொழிலாளர்களை ஏதோ காரணம் சொல்லி வேலையை விட்டு நீக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்கள், புதுச்சேரி மாநிலம் என ஒன்பது இடங்களில் பாண்ட்ஸ் தொழிற்சாலைகள் செயல்பட்டன. இங்கு பாண்ட்ஸ் பவுடர் உள்ளிட்ட அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 3,000 பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்தனர். பாண்ட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளை, 1988-ம் ஆண்டு இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகே பிரச்னைகள் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!