சிலையே உன் விலை என்ன? சிலை நகரமாக மாறிய தலைநகரம்!

சிலைக் கடத்தல் விவகாரம் ஓயாது போலிருக்கிறது. சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் பண்ணைத் தோட்டத்திலும் கடந்த இரு வாரங்களில் மீட்கப்பட்டிருக்கும் சிலைகளின் எண்ணிக்கை 200-க்கும் அதிகம். தமிழகத்தின் தலைநகரம், சிலை நகரமாக மாறியிருக்கிறது! சரி யார் இந்தத் தொழிலதிபர், எதற்காக இவர் வீட்டில் சிலைகளைப் பதுக்கிவைக்க வேண்டும்?

தமிழில் வெளியான ‘மின்சாரக் கனவு’ படத்தில் துணை நடிகராக அறிமுகமானவர் ரன்வீர் ஷா. குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவருக்குச் சொந்தமாக ஆடை ஏற்றுமதி நிறுவனங்களும், சர்க்கரை ஆலைகளும் உள்ளன. செப்டம்பர் 26-ம் தேதி இவரது சைதாப்பேட்டையில் வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் இரு கல்தூண்கள், 12 உலோகச் சிலைகள், 55 கற்சிலைகள் உள்பட 89 கலைப் பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அவரது மதுராந்தகம் மற்றும் கூழாங்கல்சேரி பண்ணை வீடுகளிலும் 200-க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ‘‘இவை அனைத்தும் கோயிலில் திருடப்பட்டவை’’ என்கிறார்கள் போலீஸார். ஆனால், போலீஸாரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறார் ரன்வீர் ஷாவின் வழக்கறிஞர் தங்கராஜ். ‘‘தன் தந்தையின் ஈமக்காரியங்கள் செய்ய குஜராத்தில் இருக்கிறார் ரன்வீர் ஷா. அவர் தலைமறைவாகவில்லை. சிலைகளுக்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றைப் போலீஸிடம் கொடுத்தபோது அவர்கள் வாங்கவில்லை. அதனால், பதிவுத் தபாலில் அனுப்பியிருக்கிறேன்” என்றார் தங்கராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்