ஐந்து நிறுவனங்கள்... ரூ.1,259 கோடி டெண்டர்... மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்! | What happened Nemmeli Seawater Desalination Plant - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஐந்து நிறுவனங்கள்... ரூ.1,259 கோடி டெண்டர்... மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்!

மிழகத்துக்கே ரெட் அலெர்ட் கொடுக்கும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனாலும், சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் இன்னமும் நிரம்பாததால், தலைநகரில் குடிநீர்த் தட்டுப்பாடுதான் நிலவுகிறது. கடந்த ஆண்டு கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தில் தவித்தது சென்னை. இதையெல்லாம் தவிர்க்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு திட்டத்தை, இன்னமும் இழுத்தடித்து வருகிறது தமிழக அரசு. இதற்கான டெண்டரும் நீதிமன்ற வழக்கில் சிக்க, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற சந்தேகம் பெரிதாக எழுந்துள்ளது.

சென்னை அருகே மீஞ்சூர், நெம்மேலி என இரு இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் செயல்படுகின்றன. மூன்றாவதாக, ‘‘நெம்மேலியில் ரூ.1,000 கோடியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும். சுமார் 6.46 லட்சம் மக்கள் பயனடைவர்’’ என 2013-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா. இந்தத் திட்டம்தான், அரசியல் போர்வைக்குள் ஐந்தரை ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. இதில் நடந்துகொண்டிருக்கும் மர்மமான திருப்பங்கள்தான், அரசியல் அதிரடிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close