ஸ்டார்ட் ஆகாத ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்! - கமிஷன் பேரம் காரணமா? | What about Smart Class Project? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஸ்டார்ட் ஆகாத ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்! - கமிஷன் பேரம் காரணமா?

‘தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்’ என்று தமிழக ஆட்சியாளர்கள் நீண்டகாலமாகச் சொல்லிவருகிறார்கள். ஆனால், அது நடைமுறைக்கே வராமல் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ‘இதற்கு கமிஷன்தான் காரணம்’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. பல மாநிலங்களில் ஏற்கெனவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், இப்போதுதான் சென்னை உட்பட இரு இடங்களில் பரிசோதனை அடிப்படையில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால்  இத்திட்டம், முழுவீச்சில் செயல்படுத்தப்படாமல் டெண்டர் குழப்படியால் முடங்கிக்கிடக்கிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு போட்டுள்ளார், வழக்கறிஞர் எர்னஸ்ட் டி பிரகாஷ் லிவிங்ஸ்டன். அவரிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close