மிஸ்டர் கழுகு: டெல்லி க்ரீன் சிக்னல்... பறிபோகிறது பன்னீர் பதவி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

மிஸ்டர் கழுகு: டெல்லி க்ரீன் சிக்னல்... பறிபோகிறது பன்னீர் பதவி!

“போகிற போக்கைப் பார்த்தால், அடுத்தடுத்த தேர்தல்களில் ‘நோட்டா’ முன்னிலை பெற்று, அத்தனை அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது’’ என்ற பீடிகையுடன் நுழைந்தார் கழுகார்.

“நான்கு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், நோட்டா பற்றி நீர் பேச ஆரம்பித்துவிட்டீர். ஏதும் ஸ்லீப்பர் செல் வேலைகள் நடக்கின்றனவா?’’ என்று கேட்டோம்.

“அப்படித்தான் என வைத்துக்கொள்ளும். ‘நோட்டா’ திரைப்படத்துக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் விடாமல் கைதட்டி ரசிக்கிறது இளைய பட்டாளம். 2016-ல் ஜெயலலிதா நோயில் வீழ்ந்தது தொடங்கி, இன்றுவரையிலான தமிழக அரசியல் நிகழ்வுகளை இரண்டரை மணி நேரத்துக்குள் காட்சிப்படுத்தியுள்ளனர். நிஜங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி சபாஷ் போட வைக்கிறது படக்குழு.’’

“அடடே, ஆனந்த விகடன் சினிமா விமர்சனத்துக்கான தகவல்களையெல்லாம் இங்கே சொல்ல ஆரம்பித்துவிட்டீரே!’’

“இது அரசியல் படம். நாமும் பேசித்தானே ஆகவேண்டும்’’ என்ற கழுகார், “சரி, இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் - தினகரன் முக்கோண மோதல் செய்திகளைக் கேளும்’’ என்றபடி தயாரானார்.

“பன்னீர் தன்னைத் தனியாக வந்து ஒரு தொழிலதிபரின் வீட்டில் சந்தித்தார் என்று தினகரன் கொளுத்திப்போட்டாலும் போட்டார்... டெல்லி வரை பற்றிக்கொண்டுவிட்டது. இதனால் இப்போதைக்கு லாபமடைந்தவர், எடப்பாடி பழனிசாமிதான். கூடவே இருந்து குடைச்சல் கொடுத்த பன்னீருக்கு தினகரன் மூலமாகவே செக் வைக்கப்பட்டுவிட்டது. வேறு வழியே இல்லாமல், ‘ஆமாம், சந்தித்தது உண்மைதான். கட்சியைக் காப்பாற்றுவதற்காகச் சந்தித்தேன். ஆனால், இது எடப்பாடியுடன் இணைவதற்கு முன்பாக நடந்தது. அங்கே இணைந்த பிறகு, தினகரனுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என்று இப்போது சொல்லியிருக்கிறார் பன்னீர்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close