மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

மினி மீல்ஸ்

வாரிசு அரசியலை ஒழிக்கக் கிளம்பிய வாரிசு!

பு
திய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும், அவரின் மகனும் புதிய தமிழகத்தின் இளைஞர் அணித் தலைவருமான ஷ்யாமும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கிருஷ்ணசாமி, “தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரானது. இனி, சமூக நீதி என்பது தி.மு.க-வை அழித்துவிட்டு புதிய தமிழகம் ஆட்சி அமைப்பதுதான்’’ என்றார். இதே கூட்டத்தில், அவரின் மகன் ஷ்யாம், “தி.மு.க-வின் வாரிசு அரசியலை ஒழிப்போம்” என்று தீர்மானம் வாசித்ததுதான் ஹை-லைட். ‘ஒரு வாரிசே வாரிசு அரசியலை வாருதப்பா...’ என்பது போன்ற கமென்ட்களை சொந்தக் கட்சியினரே வாசித்த மொமன்ட் அது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close