இடைத்தேர்தலில் ஓட்டு போட ரூ.5000 கடன்! - திருப்பரங்குன்றம் தில்லாலங்கடி | Sellur Raju atrocities in Thiruparankundram - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

இடைத்தேர்தலில் ஓட்டு போட ரூ.5000 கடன்! - திருப்பரங்குன்றம் தில்லாலங்கடி

டைத்தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத திருப்பரங்குன்றம் தொகுதியில், ‘சிறு வணிகக்கடன்’ என்ற பெயரில் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் வழங்குவதாகப் புகார் கிளம்பியுள்ளது.

‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்’’ என்று அக்டோபர் 4-ம் தேதி நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீரும், 15 அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்துவிட்டுச் சென்றனர். அதன் மறுநாளே, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு களத்தில் இறங்கினார். அவர், கூட்டுறவு வங்கிகள் சார்பாக சிறு வணிகக்கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கூட்டுறவு சங்கப் பதிவாளர் ஆகியோர் முன்னிலையில் 3,152 பேருக்கு தலா ரூ.5,000 கடன் வழங்கினார் செல்லூர் ராஜு. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார்கள். ‘‘இந்தக் கடனுதவியை இடைத்தேர்தலை மனதில் வைத்து வழங்கவில்லை(!). தமிழகமெங்கும் இதுபோன்ற கடன் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்னும் 25,000 பேருக்கு இக்கடனுதவியை வழங்கப்போகிறோம்’’ என்றார் செல்லூர் ராஜு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close