“எப்போது ராஜினாமா செய்யப் போகிறீர்கள்?”

எடப்பாடியை எகிறவைத்த கேள்வி

‘பிரதமரைச் சந்திப்பதற்கு முதல்வர் நேரம் கேட்கவில்லை’ என அமைச்சர்கள் சிலர் மறுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அக்டோபர் 7-ம் தேதி கிளம்பி டெல்லி வந்தார் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக அவர் வந்தால், டெல்லி விமான நிலையத்தில் அத்தனை எம்.பி-க்களும் பூங்கொத்துகளுடன் ஆஜராகி ஆடம்பர வரவேற்பு கொடுப்பார்கள். இம்முறை அப்படி இல்லை. நவநீதகிருஷ்ணன் உள்பட சுமார் 10 பேர் மட்டுமே பூங்கொத்துகளுடன் வந்து வரவேற்றனர்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இந்தமுறை விமான நிலையம் வரவில்லை. முதல்வரை தமிழக இல்லத்தில் வந்து அவர் சந்தித்தார். விமான நிலையத்திலும், தமிழக இல்லத்திலும் செய்தியாளர்கள் காத்திருந்தும், அவர்களை முதல்வர் சந்திக்கவில்லை. தமிழக இல்லம் வந்தவர், நேராகத் தனது அறைக்குச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில், முதல் மாடியில் உள்ள முதல்வர் சூட்டில் போடப்பட்டிருந்த பிரமாண்ட சேரில் உட்கார்ந்து 13 எம்.பி-க்களை எடப்பாடி சந்தித்தார். ஜெயலலிதா டெல்லி வரும்போது இங்குதான் சந்திப்புகளை நிகழ்த்துவார். அவர் மறைந்த பிறகு டெல்லி வந்தபோதெல்லாம்  ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆகிய இருவரும் இதுவரை இந்த சூட்டைப் பயன்படுத்தியது இல்லை. முதல்முறையாக இங்கு எடப்பாடி இந்தச் சந்திப்பை நடத்தினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் இருந்தனர். அனைவருக்கும் டீ, காபி, முந்திரிப்பருப்பு வழங்கப்பட்டன. அப்போது எடுத்த புகைப்படம், ‘எம்.பி-க்களுடன் டெல்லியில் முதல்வர் ஆலோசனை’ என்ற தகவலுடன் அடுத்த சில நிமிடங்களில் வெளியிடப்பட்டது. பத்து நிமிடங்களில் கீழிறங்கி வந்த எம்.பி-க்களிடம் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘ஆலோசனையா?” என்று கேட்டு அதிர்ந்தனர். சும்மாதான் பேசிக்கொண்டிருந்தார் களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்