ஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்!

“அரசியலுக்கு வருவேன்” என்று ரஜினிகாந்த் அறிவித்து 10 மாதங்கள் ஆகின்றன. கட்சியின் பெயரைக்கூட அவர் அறிவிக்கவில்லை. அதற்குள் ரஜினி மக்கள் மன்றம் தொடர்பாக பல சர்ச்சைகள். பல்வேறு மாவட்டங்களில் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே ரஜினியின் விசுவாசிகளாக இருந்த பழைய ஆட்கள் வரிசையாக நீக்கப்பட... மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவரசன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் மன்றத்தின் நிர்வாகிகள்!