வாரணாசியில் மோடி... அமேதியில் ராகுல்... வெற்றியைத் தீர்மானிக்கும் மாயாவதி! | Parliament Election Strategy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

வாரணாசியில் மோடி... அமேதியில் ராகுல்... வெற்றியைத் தீர்மானிக்கும் மாயாவதி!

‘புதிய சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்!’ - காந்தி பிறந்த தினத்தில் வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பிறகு இப்படி அறைகூவல் விடுத்தார்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும். உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் சேர்த்து மொத்தம் இருப்பவை 122 நாடாளுமன்றத் தொகுதிகள். ‘இந்த இரண்டு மாநிலங்களில் பி.ஜே.பி-யை வீழ்த்திவிட்டால், மோடியை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றிவிடலாம்’ எனக் கனவு கண்டார் ராகுல் காந்தி. இன்னும் ஒருபடி மேலே போய், ‘‘மோடியை அவரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் தோற்கடிப்போம்’’ என்று சவால் விட்டார் ராகுல்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) ஆகியவற்றுடன் இருக்கும் இணக்கமான கூட்டணி, அவரை அப்படிப் பேசவைத்தது. ஆனால் அடுத்த நாளே, ‘‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை’’ என அறிவித்த மாயாவதி, காங்கிரஸ் தலைவர்களின் அடிவயிற்றில் பயத்தைப் பற்ற வைத்திருக்கிறார். மாயாவதியின் இந்த முடிவு, வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவையே மாற்றக்கூடியது என்பதால், தேசிய அளவில் விவாதிக்கப்படுகிறது.

[X] Close

[X] Close