ஆவின் மீது கண் வைக்கும் ஓ.பி.எஸ். தம்பி! - குறுக்கு வழியில் நுழைவதாகப் புகார்... | OPS Brother involved Madurai Aavin Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஆவின் மீது கண் வைக்கும் ஓ.பி.எஸ். தம்பி! - குறுக்கு வழியில் நுழைவதாகப் புகார்...

துரை ஆவின் நிர்வாகக் குழு இயக்குநர் தேர்தலில் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க-வுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, போலியாக ஒரு கிராமத்தை ஓ.ராஜா உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மதுரை அ.தி.மு.க-வினர் கூறுகையில், “அண்ணன் ஓ.பி.எஸ் துணை முதல்வராக இருந்தும், எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார் தம்பி ஓ.ராஜா. அதனால், ஆவின் தலைவர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவரது திட்டம். அதன் முதல்கட்டமாகத்தான், அக்டோபர் 11-ம் தேதி நடக்கும் ஆவின் இயக்குநர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். இது தினகரன் அணிக்கு மட்டுமில்லாமல், அ.தி.மு.க-வுக்கு உள்ளேயும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரும் வரவில்லை” என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close