“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்!”

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 7-ம் தேதி ‘அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு’ நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு எதிரான தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கைகோத்தனர். மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்; சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்; முஸ்லிம்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்; முத்தலாக் அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலில் மைக் பிடித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், “இந்தியாவில் இதுவரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளில் 10 சதவிகிதம்கூட நடைமுறைப்படுத்தப்பட வில்லை. அந்தச் சட்டத்தை அழிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!